இந்தியாவை தோற்கடியுங்கள்; அப்புறம் நான்... பாகிஸ்தானிய நடிகையின் அதிரடி வாக்குறுதி
|உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அடுத்த ஆட்டத்தில் இந்தியாவை வங்காளதேசம் வீழ்த்தும் என பாகிஸ்தானிய நடிகை நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
கராச்சி,
பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த வாரம் சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் அந்த அணியின் திறன் பற்றி பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நாளை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில், இந்தியாவை வங்காளதேச அணி வெற்றி கொள்ளும் என பாகிஸ்தானிய நடிகை ஒருவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி நடிகை ஷெஹர் ஷின்வாரி, எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், அடுத்த போட்டியில் என்னுடைய வங்காளதேச சகோதரர்கள் எங்களுக்காக பழி வாங்குவார்கள்.
இந்தியாவை அவர்கள் வீழ்த்தினால், நான் டாக்காவுக்கு சென்று வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஒருவருடன் இரவு விருந்துக்கான டேட்டில் (டின்னர் டேட்) கலந்து கொள்வேன் என பதிவிட்டு உள்ளார். தொடர்ந்து, வெற்றி சின்னம் மற்றும் காதலுக்கான எமோஜியையும் வெளியிட்டு உள்ளார்.
இதேபோன்று, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியல் பல்வேறு எதிர்ப்புகளை ஐ.சி.சி.யிடம் தெரிவித்து உள்ளது. பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுக்கு விசா வழங்க தாதமம், பாகிஸ்தானிய ரசிகர்களுக்கான விசா கொள்கை எதுவும் இல்லாதது உள்ளிட்டவற்றை சுட்டி காட்டியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக முறையற்ற வகையில் நடந்த விதம் பற்றி புகார் ஒன்றையும் அளித்து உள்ளது. பாகிஸ்தான் அடுத்து ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாட உள்ளது.