ரோஜா குறித்து அவதூறு: குஷ்பு கடும் கண்டனம்
|சமீபத்தில் நடிகையும், ஆந்திரா சுற்றுலாத்துறை மந்திரியுமான ரோஜாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முன்னாள் மந்திரி பண்டாரு சத்ய நாராயணா பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆந்திரா மாநில முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, தெலுங்கு தேசம் கட்சியினர் - ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் இடையே வார்த்தை போர் வெடித்திருக்கிறது.
சமீபத்தில் நடிகையும், ஆந்திரா சுற்றுலாத்துறை மந்திரியுமான ரோஜாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முன்னாள் மந்திரி பண்டாரு சத்ய நாராயணா பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
ஒரு பெண்ணை பற்றி இவ்வளவு ஆபாசமாக பேசியது மன்னிக்க முடியாத குற்றம். பண்டாரு சத்யநாராயணாவின் இந்த பேச்சு அவர் எவ்வளவு கேவலமானவர், கீழ்த்தரமானவர் என்பதை காட்டுகிறது. பெண்களைப் பற்றி அவர் பேசியுள்ள வார்த்தைகள் அருவறுப்பை தருகிறது.
பெண் சக்தியை போற்றும் இந்த தேசத்தில் இப்படியும் சில பேர்வழிகள் இருப்பது வருத்தம் அளிக்கிறது. இப்படி கேவலமான வார்த்தைகளால் பெண்களை தாக்கி பேச வெட்கமாக இல்லையா? பெண்களை மதிக்கும் யாருமே இப்படி தரம் தாழ்ந்து பேசமாட்டார்கள். ரோஜாவிடம் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லாவிட்டால் அவர் தண்டிக்கப்படும் வரை எனது போராட்டம் தொடரும்.
இதேபோல நடிகை ராதிகா உள்ளிட்டோரும் ரோஜாவுக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.