< Back
சினிமா செய்திகள்
ஜவான் வெற்றி: ஷாருக்கானுக்கு  இறுக்கி அணைச்சி உம்மா கொடுத்த  தீபிகா படுகோனே..!
சினிமா செய்திகள்

ஜவான் வெற்றி: ஷாருக்கானுக்கு "இறுக்கி அணைச்சி உம்மா கொடுத்த" தீபிகா படுகோனே..!

தினத்தந்தி
|
17 Sept 2023 10:20 AM IST

கோலிவுட் முதல் பாலிவுட் வரை இந்த ஜவான் திரைப்படம் வசூலில் கலக்கி வருகிறது.

மும்பை,

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான், விஜய்சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஜவான். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் கலக்கி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கோலிவுட் முதல் பாலிவுட் வரை இந்த ஜவான் திரைப்படம் வசூலில் கலக்கி வருகிறது. உலகம் முழுவதும் வசூலில் இப்படம் தற்போது வரை ரூ.700 கோடியை எட்டியுள்ளது.

இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்கள் சந்திப்பை ஜவான் படக்குழு நடத்தினர். நன்றி சொல்லும் விதமாக இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ஷாருக்கான், தீபிகா படுகோனே, அனிருத், அட்லீ என பலரும் கலந்துகொண்டனர்.

அட்லீ உள்ளிட்ட அனைவருக்கும் ஷாருக்கான் பாராட்டுத் தெரிவித்தார். மேலும், இந்த நிகழ்வில் சில ஜாலியான நிகழ்வுகளும் நடைபெற்றன. குறிப்பாக, ஜவான் வெற்றிக்காக ஷாருக்கானை கட்டியணைத்து நடிகை தீபிகா படுகோனே, சர்ப்ரைஸாக முத்தம் கொடுத்து அசத்தினார். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

ஷாருக்கானுடன் பல படங்களில் நடித்துள்ள நடிகை தீபிகா படுகோனே, ஷாருக்கானுக்கு முத்தம் கொடுப்பது இது முதல் முறையல்ல… இவர்களது படங்களின் வெற்றி விழாவின் போது, இதுபோல் பல முறை தனது அன்பு முத்தத்தை பகிர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்