< Back
சினிமா செய்திகள்
தீபிகா படுகோனேவுக்கு ரூ.18 கோடி சம்பளம்
சினிமா செய்திகள்

தீபிகா படுகோனேவுக்கு ரூ.18 கோடி சம்பளம்

தினத்தந்தி
|
23 Feb 2023 9:04 AM IST

தெலுங்கு டைரக்டர் நாக் அஷ்வின் இயக்கி வரும் புதிய படத்தில் தீபிகா படுகோனேவுக்கு ரூ.18 கோடி சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஷாருக்கான் - தீபிகா படுகோனே ஜோடியாக நடித்த 'பதான்' படம், உலகம் முழுவதும் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. இந்த படம் மூலம் தீபிகா படுகோனேவுக்கு மவுசு கூடி உள்ளது. சம்பளத்தையும் உயர்த்தி இருக்கிறார்.

தெலுங்கு டைரக்டர் நாக் அஷ்வின் இயக்கி வரும் புதிய படத்தில் தீபிகா படுகோனேவுக்கு ரூ.18 கோடி சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் இந்தி சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக அவர் மாறியிருக்கிறார். இந்த படத்தில் அமிதாப்பச்சன், பிரபாஸ், திஷா பதானி ஆகியோரும் நடிக்கிறார்கள். ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது.

தீபிகா படுகோனே போலவே முன்னணி கதாநாயகிகள் பலரும் தங்களது சம்பளத்தை உயர்த்தியிருக்கிறார்கள். கொரட்டல சிவா இயக்கும் தெலுங்கு படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்க ஜான்வி கபூருக்கு ரூ.4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கி வரும் படத்தில் நடிக்க கியாரா அத்வானிக்கு ரூ.4 கோடி வழங்கப்பட்டு உள்ளது. 'ஆதிபுருஷ்' படத்தில் சீதையாக நடிக்க கிருதி சனோன் ரூ.5 கோடி பெற்றுள்ளார். அலியா பட் சம்பளமும் ரூ.5 கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்