தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ தீபிகா படுகோனே சொல்லும் யோசனை
|தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்தவர் தீபிகா படுகோனே. இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் திருமண வாழ்க்கையில் தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ வழி சொல்லி தீபிகா படுகோனே அளித்துள்ள பேட்டியில், "சிறு வயது முதலே வேறு வேறு இடங்களில் வளரும் இரண்டு பேர் திருமண பந்தத்தில் இணையும்போது அவர்களின் எண்ணங்கள் ஒரே மாதிரியாக நிச்சயம் இருக்காது. நாம் பிறந்து வளர்ந்த சூழல், சமூக வாழ்க்கை, மனிதர்களின் ஆலோசனை போன்றவற்றின் தாக்கம் இருவர் மீதும் இருக்கும். இதை நினைவில் வைத்துக் கொண்டால் நிறைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.
வித்தியாசமான பின்னணியில் இருந்து வந்த இருவர் கணவன் மனைவியாக ஆன பின்பு கருத்து வேறுபாடுகள் வருவது சகஜம். அந்த நேரத்தில் கொஞ்சம் பொறுமையோடு நடந்து கொள்ள வேண்டும். நமது பெற்றோரை அணுகி பிரச்சினைகளை சொன்னால் அவர்கள் சரியான தீர்வை சொல்வார்கள்.
பெற்றோர் மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து இன்றைய தலைமுறை கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது'' என்றார்.