ரசிகரின் செல்போனை தட்டிவிட்ட தீபிகா படுகோன்
|விமான நிலையத்தில், தன்னை செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த ரசிகரின் செல்போனை நடிகை தீபிகா படுகோனே, தட்டிவிட முயன்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர்கள் தீபிகா படுகோனே- ரன்வீர் இருவரும் தங்கள் முதல் குழந்தையை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். இதற்கிடையில் தனது திருமண புகைப்படங்களை சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கி விவாகரத்து சர்ச்சையை கிளப்பினார் ரன்வீர். ஆனால், தீபிகாவுடன் விவாகரத்து இல்லை என்பதையும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெளிவுப்படுத்தி இருந்தார்.
இந்த சர்ச்சைகள் எல்லாம் ஓயும் முன்பு இப்போது இந்த ஜோடி பற்றிய அடுத்த சர்ச்சை கிளம்பியிருக்கிறது. கர்ப்ப காலத்தில் மனைவி தீபிகாவை ரிலாக்ஸ் செய்ய அவரை பேபி மூன் அழைத்து சென்றிருக்கிறார் ரன்வீர். அதை முடித்துவிட்டு மும்பை திரும்பியிருக்கிறது இந்த ஜோடி.
அப்போது மும்பை ஏர்போர்ட்டில் இவர்களை அங்கிருந்த ரசிகர்கள் சூழ்ந்து புகைப்படங்கள் வீடியோக்கள் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதனைப் பார்த்த தீபிகா, தன்னைப் வீடியோ எடுத்த ரசிகர் ஒருவரின் செல்ஃபோனை தன் கையால் மறைத்து தட்டிவிட முயன்றிருக்கிறார். இந்த வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இதைப் பார்த்தப் பலரும் 'ரசிகர்கள் இல்லாமல் நடிகர்கள் இல்லை. அப்படி இருக்கும் போது, தீபிகா இப்படி நடந்து கொள்வது முறையல்ல' என்றும், 'உண்மையில் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா?' என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.