'தி பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7': நடிக்க மறுத்த தீபிகா படுகோன் - காரணம் என்ன தெரியுமா?
|தி பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7-ல் நடிக்க கடந்த 2013-ம் ஆண்டு பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனுக்கு அழைப்பு வந்திருக்கிறது.
மும்பை,
உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட ஹாலிவுட் தொடர் தி பாஸ்ட் அண்ட் பியூரியஸ். கடந்த 2001-ல் வெளியான இந்த தொடரின் முதல் பாகத்தின் வெற்றியையடுத்து பல பாகங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. முன்னதாக வெளியான தி பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7-ல் நடிக்க கடந்த 2013-ம் ஆண்டு பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனுக்கு அழைப்பு வந்திருக்கிறது. ஆனால், அதில் அவர் நடிக்க முடியாமல் போயுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு வெளியான தி பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7-ல் பால் வாக்கர்,கோடி வாக்கர், நதாலி இம்மானுவேல், ஜேசன் ஸ்டாதம், வின் டீசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இதில், நதாலி இம்மானுவேல் நடித்த ராம்சேயின் கதாபாத்திரம் முதலில் நடிகை தீபிகா படுகோனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனால், அப்போது நடிகை தீபிகா படுகோன், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான 'கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா' படத்தில் பிஷியாக இருந்ததால் இந்த அழைப்பை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில், 'தி பாஸ்ட் அண்ட் பியூரியஸ்-ல் நடிக்காதது ஏன் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்து தீபீகா கூறுகையில், 'நான் அதற்கு வருந்தவில்லை. ஒப்பந்தமான படத்தை முதலில் நடித்து முடிக்க வேண்டும். அதன்படி, முதலில் நான் ஒப்பந்தமானது 'கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா படத்திற்கு தான். அப்போது அந்த படத்தில் சில காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது. அதை பாதியிலேயே விட்டுவிட்டு செல்ல முடியாது', என்றார்.