தாயாகும் தீபிகா படுகோன்.. செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்க உள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவு
|தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங்கிற்கும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மும்பை,
பாலிவுட் நட்சத்திர ஜோடியாக வலம்வரும் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோன் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட 6 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு இருவரும் கோலாகலமாக இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்னரும் ரன்வீர், தீபிகா இருவருமே சினிமாவில் பிசியாக நடித்து வந்தனர். குறிப்பாக ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே கடந்த ஆண்டில் மட்டும் இரண்டு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று தீபிகா படுகோன் - ரன்வீர்சிங் இன்ஸ்டாகிராமில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர். தீபிகா 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், செப்டம்பர் மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தீபிகா படுகோன் கர்ப்பமாக இருக்கலாம் என கடந்த சில தினங்களுக்கு முன் செய்தி பரவியது. 77-வது பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருது விழாவில் சிகப்பு கம்பளத்தின் மீது பளபளக்கும் சேலையை அணிந்திருந்த போது அவர் தனது வயிற்றுப்பகுதியை மறைத்ததாக கூறப்படுகிறது. தீபிகா படுகோன் தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ள செய்தி பரவியதும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மகிழ்ச்சி அடைந்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் வோக் சிங்கப்பூர் ஊடகத்துக்கு தீபிகா அளித்த பேட்டியில் தாய்மை பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். "நிச்சயமாக ரன்வீரும் நானும் குழந்தைகளை நேசிக்கிறோம். நாங்கள் எங்கள் சொந்த குடும்பத்தைத் தொடங்கும் நாளுக்காக காத்திருக்கிறோம்" என்று அப்போது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.