< Back
சினிமா செய்திகள்
Deepika Padukone, Kareena Kapoor Khan, Alia Bhatt: Find out whos the highest paid actress in Hindi cinema and heres how much she gets per film!
சினிமா செய்திகள்

பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் யார் தெரியுமா?

தினத்தந்தி
|
24 July 2024 5:45 PM IST

பாலிவுட் நடிகைகள் ஒரு படத்திற்கு கோடி கணக்கில் சம்பளம் வாங்கிறார்கள்.

மும்பை,

இந்தியத் திரையுலகத்தில் இந்திப் படங்கள்தான் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியாகின்றன. இவ்வாறு வெளியாகும் பாலிவுட் படங்களில் நடிக்கும் நடிகைகள் அனைவருமே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள்.

நடிகைகளுக்கும் நடிகர்களுக்கும் வழங்கப்படும் சம்பளத்தில் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. இந்த ஊதிய ஏற்றத்தாழ்வு தற்போதுவரை பேசுபொருளாகவே உள்ளது.

அந்த வகையில், தற்போது கரீனா கபூர், தீபிகா படுகோன், ஆலியா பட், கத்ரீனா கைப், கிருத்தி சனோன், கங்கனா ரனாவத், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பல முன்னனி பாலிவுட் நடிகைகளில் யார் அதிக சம்பளம் வாங்குகிறார், எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதை பார்ப்போம்.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர், தீபிகா படுகோன். இவர் ஒரு படத்திற்கு சுமார் ரூ.15 முதல் 20 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். 2-வது இடத்தில் நடிகை ஆலியா பட் உள்ளார். இவர் ஒரு படத்திற்கு ரூ.15 கோடிவரை சம்பளம் பெறுகிறார்.

அடுத்ததாக 3-வது இடத்தில் இருப்பவர் கரீனா கபூர். இவர் ஒரு படத்திற்கு சுமார் ரூ.8 முதல் 11 கோடி சம்பளம் வாங்குகிறார். 4-வது மற்றும் 5-வது இடத்தில் நடிகை கத்ரீனா கைப் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோர் உள்ளனர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக, மற்ற நடிகைகளான கங்கனா ரனாவத், கிருத்தி சனோன், கியாரா அத்வானி, டாப்ஸி ஆகியோர் ரூ. 5 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்குகின்றனர்.

மேலும் செய்திகள்