"நிகழ்ச்சியில் கைகோர்க்க மறுத்தார்" ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே விவாகரத்தா...?
|ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே நட்சத்திர தம்பதியார் விவாகரத்து செய்ய முடிவடுத்து இருப்பதாகவும் தகவல்கள் தீயாக பரவி வருகிறது.
மும்பை
பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே ஆகிய இருவரும் விவாகரத்து பெற போவதாக செய்திகள் பரவி திரையுலகினரிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனே ஆகிய இருவரும் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு இருவரும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர்.
2022ம் ஆண்டின் அதிக பிரபலமான செலிபிரிட்டியாக ரன்வீர் சிங் தேர்வாகியுள்ளார்.
இந்திய அளவில் 2022ம் ஆண்டின் பிரபலங்கள் என்ற பட்டியலை கிரால் ஆலோசனை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சோசியல் மீடியாவில் பிரபலங்கள் மூலம் விளம்பரப்படுத்தும் பொருட்களின் மதிப்பு போன்றவற்றை அடிப்படையாக வைத்து 25 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வரிசையில் இந்தியாவின் பிரபலமான நபராக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் முதலிடம் பெற்றுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இதில் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரன்வீர் சிங் இந்தளவுக்கு பிரபலமாக இருந்தாலும் அவரது மனைவி தீபிகா படுகோனேவிடம் செல்ஃப் எடுக்க முடியாமல் திணறியுள்ளார். மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் ரன்வீர் சிங்கும் தீபிகாவும் கலந்துகொண்டனர். அப்போது இருவரும் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தபோது தீபிகாவின் கையை பிடிக்க முயன்றார் ரன்வீர் சிங். ஆனால், தீபிகா படுகோனே ரன்வீர் சிங்கின் கையை பிடிக்காமல் விட்டுவிட்டார்.
அதுமட்டும் இல்லாமல் ரன்வீர் சிங்கை முகம் கொடுத்துக் கூட பார்க்கவே இல்லை. இதனால் கடுப்பான ரன்வீர் சிங் வேகவேகமாக முன்னால் நடந்து சென்றுவிட்டார். இந்த வீடியோ டுவீட்டர் உட்பட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இருவருக்கும் இடையே எதோ பிரச்சினை என்றும், விவாகரத்து செய்யப் போகிறார்களா எனவும் கேள்வி எழுந்துள்ளது.
சில மாதங்களாகவே ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே ஆகிய இருவரும் மண வாழ்க்கையில் சந்தோஷமாக இல்லையென்றும் அதனால் தான் தீபிகாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த நட்சத்திர தம்பதியார் விவாகரத்து செய்ய முடிவடுத்து இருப்பதாகவும் தகவல்கள் தீயாக பரவி வருகிறது. இவர்களின் விவாகரத்து குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்த போதிலும் இதுவரை இருவரும் இதுபற்றி எதுவும் கூறவில்லை. இந்நிலையில் சமீபத்தில் ரன்வீர் சிங் பிங்க் நிற உடையணிந்து ஒரு புகைப்படத்தை அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி இருந்தார், அந்த புகைப்படத்திற்கு தீபிகா 'எடிபிள்' என்று கமெண்ட் செய்துள்ளார் அதற்கு பதிலளிக்கும் விதமாக ரன்வீர் முத்த எமோஜி ஒன்றை பதில் கமெண்ட் செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்து இருக்கின்றனர்.