கணவருக்கு தெரியாமல் படுகவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட தீபிகா படுகோன்...! அதிர்ச்சியில் ரன்வீர் சிங்...!
|நடிகை தீபிகா படுகோன் கருப்பு வெள்ளை பிகினி அணிந்து கவர்ச்சியில் கலக்குகிறார்.
மும்பை,
சினிமா துறையில் நீண்ட நாள் தங்கள் இடத்தை தக்கவைத்துக்கொள்வது எளிதல்ல குறிப்பாக நடிகைகள். இருப்பினும் நடிகையான தீபிகா படுகோன், தொடர் ஆபர்களுடன் தனது கேரியரை திட்டமிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.
பதான் படத்தில் நீச்சலுடையில், தீபிகா படுகவர்ச்சியாக நடித்து இருந்தார். இந்த படத்தில் வரும் பேஷரம் ரங் பாடலில் அவர் அணிந்திருந்த பிகினி அந்தளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
பதான் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் தீபிகா படுகோன். தற்போது தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளால் தீபிகா பிசியாக உள்ளார். அவர் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார்.
தற்போது நடிகை தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராமில் பிகினி உடையில் இருக்கும் புதிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
நடிகை தீபிகா படுகோன் கருப்பு, வெள்ளை பிகினி அணிந்து கவர்ச்சியில் கலக்குகிறார். இந்த புகைப்படம் அதிக லைக்குகளை பெற்று வருகிறது. இந்த புகைப்படம் வைரலாகி ஒரு மணி நேரத்தில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
இந்த புகைப்படத்தை பகிர்வது குறித்து கணவர் ரன்வீர் சிங்கிற்கு கூட தெரிவிக்கப்படவில்லை என தெரிகிறது. ரன்வீர் சிங் அந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளார். புகைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், புகைப்படத்தை வெளியிடும் முன் எச்சரிக்கை செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என கருத்து தெரிவித்துள்ளார்.
தீபிகாவும் ரன்வீர் சிங்கும் சில வருடங்கள் காதலித்து 2018-ல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் இந்த ஜோடி திரைப்படங்களில் நடித்து வருகிறது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள கடைசி படம் 'சர்க்கஸ்', இது 2022 டிசம்பரில் வெளியானது.