< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
மே 1-ந் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்
|28 April 2024 7:52 PM IST
23 ஆண்டுகளுக்கு பின் 'தீனா' படம் டிஜிட்டல் பதிப்பில் வருகிற மே 1 - ந்தேதி அஜித்குமார் பிறந்த நாளில் 'ரீ ரிலீஸ்' செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2001-ல் வெளிவந்த படம் 'தீனா'.இப்படத்தில் அஜித் குமார், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் இணைந்து நடித்தனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்தார். இந்த படத்திற்கு பின் அஜித்திற்கு 'தல' என்ற பட்டம் பிரபலமானது.
இந்நிலையில் 23 ஆண்டுகளுக்கு பின் 'தீனா' படம் டிஜிட்டல் பதிப்பில் வருகிற மே 1 - ந்தேதி அஜித்குமார் பிறந்த நாளில் 'ரீ ரிலீஸ்' செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே தேதியில் அஜித்தின் பில்லா படமும் 'ரீ ரிலீஸ்' ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அஜித் பிறந்த நாள் விழாவை மே 1- ந் தேதி அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாட உள்ளனர். அன்றைய தினம் தியேட்டர்களில் அஜித் படங்கள் மீண்டும் "ரீ ரிலீஸ்" செய்யப்படுவதை யொட்டி அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.