< Back
சினிமா செய்திகள்
கொலை மிரட்டல் வருகிறது... நடிகர் பிரகாஷ்ராஜ் போலீசில் புகார்
சினிமா செய்திகள்

கொலை மிரட்டல் வருகிறது... நடிகர் பிரகாஷ்ராஜ் போலீசில் புகார்

தினத்தந்தி
|
22 Sept 2023 6:47 AM IST

நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார். மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான கருத்துகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் கர்நாடகா மாநிலம் கலபுரகியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரகாஷ்ராஜ் கலந்துகொண்டு பேசும்போது, சனாதன தர்மம் குறித்து சர்ச்சை கருத்துகளை தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது

இந்தநிலையில், பெங்களூருவில் உள்ள அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், 'சனாதன தர்மம் குறித்து தான் தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் யூ-டியூபில் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்', என்று குறிப்பிட்டு உள்ளார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்