< Back
சினிமா செய்திகள்
கோயம்புத்தூர்
சினிமா செய்திகள்
சத்யராஜ் தாயார் மறைவு: அமைச்சர் சேகர்பாபு நேரில் அஞ்சலி...!
|12 Aug 2023 1:01 PM IST
நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் வயது மூப்பின் காரணமாக காலமானார்.
கோவை,
நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் (வயது 94). கோவையில் வசித்து வந்த அவர் வயது மூப்பின் காரணமாக நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு காலமானார்.
இறுதி அஞ்சலிக்காக கோவையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.