< Back
சினிமா செய்திகள்
Deadpool And Wolverine India Box Office Collections Day 1 Estimate: Ryan Reynolds and Hugh Jackman movie takes an excellent start; Collects an impressive Rs 21 crore
சினிமா செய்திகள்

'ஸ்பைடர் மேன்','டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்' வரிசையில் 'டெட்பூல் & வோல்வரின்' - முதல் நாள் வசூல் இவ்வளவா?

தினத்தந்தி
|
27 July 2024 9:54 AM IST

வோல்வரின் மற்றும் டெட்பூல் பாத்திரங்களை ஒன்றிணைத்து 'டெட்பூல் & வோல்வரின்' என்ற படம் உருவாகியுள்ளது.

சென்னை,

மார்வெல் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, அவெஞ்சர்ஸ் படம் அனைவருக்கும் பிடித்த படமாக உள்ளது. அதில் வரும் ஹீரோக்களுக்கும் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அயர்ன் மேன், ஹல்க், தோர், ஸ்பைடர் மேன், கேப்டன் அமெரிக்கா, நடாசா உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு இணையாக வோல்வரின் மற்றும் டெட்பூல் கதாபாத்திரங்களுக்கும் ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது, வோல்வரின் மற்றும் டெட்பூல் பாத்திரங்களை ஒன்றிணைத்து 'டெட்பூல் & வோல்வரின்'என்ற படம் உருவாகியுள்ளது. இது இதற்கு முன்னதாக வந்த டெட்பூல் மற்றும் டெட்பூல் 2 ஆகிய படங்களின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படம் நேற்று இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. ரசிகர்களை இப்படம் வெகுவாக கவர்ந்து வசூலை அள்ளியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாளில் இந்தியாவில் ரூ.21 கோடி வசூலித்துள்ளது.

இதன் மூலம் மார்வெல் திரைப்படம் ஒன்று முதல் நாளில் இந்தியாவில் அதிக வசூல் செய்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம், ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் மற்றும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆப் மேட்னஸ் வரிசையில் தற்போது டெட்பூல் & வோல்வரின் இணைந்துள்ளது.

மேலும் செய்திகள்