< Back
சினிமா செய்திகள்
சுஷ்மிதா சென்னுடன் நெருங்கிய நட்புறவு உள்ளது - லலித் மோடியின் அறிவிப்புக்கு சுஷ்மிதாவின் முன்னாள் காதலரின் பளிச் பதில்
சினிமா செய்திகள்

சுஷ்மிதா சென்னுடன் நெருங்கிய நட்புறவு உள்ளது - லலித் மோடியின் அறிவிப்புக்கு சுஷ்மிதாவின் முன்னாள் காதலரின் பளிச் பதில்

தினத்தந்தி
|
16 July 2022 6:18 PM IST

சுஷ்மிதா சென் தன்னில் பாதி என்றும், விரைவில் திருமணம் நடக்கும் என்றும் லலித் மோடி தெரிவித்திருந்தார்.

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்திய லலித் மோடி, சுஷ்மிதா சென்னுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

அதன்படி, ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென் இடையே திருமணம் நடைபெற்றதாக தகவல் அறிவிக்கப்பட்டது. இது நிஜத்தில் அல்ல, சமூக வலைதளமான டுவிட்டரில் தான் இது அரங்கேறியுள்ளது.

மேலும், சுஷ்மிதா சென் தன்னில் பாதி என்றும், இன்னும் அவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும், ஆனால் அது விரைவில் நடக்கும் என்றும் லலித் மோடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இரு மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சுஷ்மிதா சென், தான் தற்போது மகிழ்ச்சியான இடத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை, மோதிரம் மாற்றிக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ள அவர், நிபந்தனையற்ற அன்பால் சூழப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் போதுமான விளக்கம் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், எனவே, இனி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வேலையை கவனிக்க வேண்டும் என்றும் சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார்.

நடிகை சுஷ்மிதா சென்னுக்கும் லலித் மோடிக்கும் இடையே 10 வருட வயது வித்தியாசம் உள்ளது. இதனை பலர் விமர்சித்து வந்தனர்.

இதனையடுத்து பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னின் முன்னாள் காதலர் ரோஹ்மன் ஷால், லலித் மோடியுடனான சுஷ்மிதாவின் உறவு குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அவர், தனது முன்னாள் காதலியான சுஷ்மிதாவை சமூக ஊடகங்களில் கேலி செய்ததற்காக விமர்சகர்களை மறைமுகமாக விமர்சித்தார்.

அவர் கூறியிருப்பதாவது:- "ஒருவரைப் பார்த்து சிரிப்பதன் மூலம் நீங்கள் நிம்மதியாக இருப்பதைக் கண்டால், சிரிக்கவும்! ஏனென்றால் அது அவர் அல்ல, நீங்கள்" என்று தெரிவித்தார்.


மறுமுனையில், லலித் மோடியின் மகன் கூறுகையில், தனது தந்தை உட்பட தங்களது குடும்ப விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க போவதில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்