< Back
சினிமா செய்திகள்
டேனியல் பாலாஜி மறைவு - சூர்யா வேதனை பதிவு
சினிமா செய்திகள்

டேனியல் பாலாஜி மறைவு - சூர்யா வேதனை பதிவு

தினத்தந்தி
|
30 March 2024 7:21 PM IST

நடிகர் சூர்யா, டேனியல் பாலாஜி மறைவு குறித்து வேதனையுடன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்

சென்னை,

கமல்ஹாசன் கதாநாயகராக நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் டேனியல் பாலாஜி (வயது 48). இவர் பொல்லாதவன், காக்க காக்க, பைரவா உள்பட பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் டேனியல் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் சூர்யா, டேனியல் பாலாஜி மறைவு குறித்து வேதனையுடன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,

டேனியல் பாலாஜி குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான இரங்கல்கள். அவரது மறைவு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஒரு ஷாட் சரியாக வருவதற்கு கடுமையாக உழைப்பார். அவருடன் காக்க காக்க படத்தில் பணியாற்றிய இனிய நினைவுகள் இன்னும் இருக்கின்றன. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்