வைரலாகும் அப்பா பாடல்... சிறுமியின் விவரம் கேட்கும் இசைமைப்பாளர் இமான்..!
|ஏழை சிறுமி ஒருவர் அப்பா குறித்து பாடிய பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி. இமான். இவர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி. இமான் பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.
சமீபத்தில் இவர் ஒரு நேர்காணலில் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், இனி அவருடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் எனவும் தெரிவித்திருந்தார். அது சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாகி பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் ஏழை சிறுமி ஒருவர் அப்பா குறித்து பாடிய பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலானது. அந்த விடியோவை பார்த்த இசையமைப்பாளர் டி. இமான் அவருக்கு உதவி செய்யும் நோக்கில் அந்த சிறுமியின் பெயர் மற்றும் தொடர்பு விவரத்தை கேட்டு அந்த பதிவில் கமெண்ட் செய்துள்ளார். அதனை ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து அந்த சிறுமியின் விவரத்தை சேகரித்து வருகின்றனர்.