கவின் நடித்த 'டாடா படத்தின் வீடியோ பாடல் வெளியீடு
|டாடா படத்தில் இடம்பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தாயாக நான் என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த திரைப்படம் 'டாடா'. இதில் பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை பார்த்த திரையுலகினர் பலரும் தங்களின் பாராட்டுக்களை சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டாடா படத்தில் இடம்பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தாயாக நான் என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Soulful video song #ThayagaNaan from #DADa is out now.
— Think Music (@thinkmusicindia) February 23, 2023
▶️ https://t.co/xFGe9hB8dR
A @JenMartinmusic musical @RedGiantMovies_ @MShenbagamoort3@OlympiaMovies @ambethkumarmla @ganeshkbabu @Kavin_m_0431 @aparnaDasss pic.twitter.com/tQujdPhzqS