'டாடா' படத்தில் இருந்து 'கிலேச காதலா' பாடலை வெளியிட்டது படக்குழு
|‘டாடா’ படத்தில் இடம்பெற்றுள்ள 'கிலேச காதலா' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை,
சின்னத்திரை சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், 'நட்புன்னா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து அவர் நடித்த 'லிஃப்ட்' திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடித்த 'டாடா' திரைப்படம் கடந்த பிப்ரவரி 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் பாக்யராஜ், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், 'டாடா' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கிலேச காதலா' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
"Anbil sindhum kanneer pola vairam illai"
Thank you @Lyricist_Mohan na for #KlesaKaadhala :) @JenMartinmusic ♥️#Janani #MalviSundaresan #Kalyan @thinkmusicindia
▶️ https://t.co/0Kygkss7Sl pic.twitter.com/rrfyj3RmMZ