< Back
சினிமா செய்திகள்
மீரா நந்தனுக்கு எதிராக சைபர் தாக்குதல்
சினிமா செய்திகள்

மீரா நந்தனுக்கு எதிராக 'சைபர்' தாக்குதல்

தினத்தந்தி
|
25 Dec 2022 1:56 PM IST

மீரா நந்தன் வலைத்தளத்தில் பதிவிட்ட ஒரு வீடியோவில் அணிந்திருந்த குட்டையான உடை சர்ச்சையை கிளப்பியது. இது மீரா நந்தனுக்கு எதிரான இந்த சைபர் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

கதாநாயகிகளுக்கு எதிராக வலைத்தளங்களில் தொடர்ந்து அவதூறு பதிவுகள் மூலம் 'சைபர்' தாக்குதல்கள் நடந்து வருகின்றன. தற்போது இதில் நடிகை மீரா நந்தன் சிக்கி உள்ளார். இவர் தமிழில் வால்மீகி, அய்யனார். சூர்ய நகரம், நேர்முகம், சண்டமாருதம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். மீரா நந்தன் வலைத்தளத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் மீரா நந்தன் அணிந்திருந்த குட்டையான உடை சர்ச்சையை கிளப்பியது. ஆபாசமாக மோசமான உடை அணிந்து இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின.

மீரா நந்தனை கடுமையாக அவதூறு செய்து கேவலமான வார்த்தைகளை பதிவு செய்தும் கண்டித்தனர். மீரா நந்தனுக்கு எதிரான இந்த சைபர் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் மீரா நந்தனுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்துக்கள் தெரிவித்தனர். என்ன உடை அணிவது என்பது மீரா நந்தன் உரிமை. அவரை விமர்ச்சிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்று எதிர்ப்பாளர்களுக்கு அவர்கள் பதிலடி கொடுத்தனர்.

மேலும் செய்திகள்