'சி.டி.ஆர்.எல்' வெற்றி: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அனன்யா பாண்டே
|'சி.டி.ஆர்.எல்' படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
மும்பை,
ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் அனன்யா பாண்டே. சமீபத்தில் தனது முதல் வெப் தொடரான 'கால் மீ பே'வில் நடித்திருந்தார். இந்த தொடர் கடந்த மாதம் 6-ம் தேதி பிரைம் வீடியோ ஓ.டி.டி தளத்தில் வெளியானது. இதனைத்தொடர்ந்து, 'சி.டி.ஆர்.எல்' என்ற படத்தில் நடித்துள்ளார். சாப்ரான் மற்றும் அந்தோலன் பிலிம்ஸ் இணைந்து இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.
இந்த திரில்லர் படத்தில் அனன்யா பாண்டே கண்டன்ட் கிரியேட்டராக நடித்திருக்கிறார். இப்படம் கடந்த 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், சி.டி.ஆர்.எல் படத்தின் வெற்றிக்கு நடிகை அனன்யா பாண்டே ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'எல்லா அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றி. நான் எப்படி உணர்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். மிகவும் அற்புதமான நடிகர்கள் மற்றும் குழுவினர் இல்லாமல் இவை எதுவும் சாத்தியமில்லை' இவ்வாறு தெரிவித்துள்ளார்.