< Back
சினிமா செய்திகள்
CTRL: Anurag Kashyap hails Ananya Pandey as career best performance
சினிமா செய்திகள்

சி.டி.ஆர்.எல்: 'கெரியரில் சிறந்த நடிப்பு' - அனன்யா பாண்டேவை பாராட்டிய அனுராக் காஷ்யப்

தினத்தந்தி
|
5 Oct 2024 12:30 PM IST

அனன்யா பாண்டே நடித்துள்ள‌'சி.டி.ஆர்.எல்' படம் நேற்று ஓ.டி.டி தள‌த்தில் வெளியானது.

மும்பை,

ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் அனன்யா பாண்டே. அதன் பிறகு பதி பத்னி அவுர் வா போன்ற படங்களில் நடித்தார். மேலும், நடிகை அனன்யா பாண்டே 'காலி பீலி', 'கெஹ்ரையான்', 'லைகர், டிரீம் கேர்ள்-2' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் தனது முதல் வெப் தொடரான 'கால் மீ பே'வில் நடித்திருந்தார். இந்த தொடர் கடந்த மாதம் 6-ம் தேதி பிரைம் வீடியோ ஓ.டி.டி தளத்தில் வெளியானது. இதனைத்தொடர்ந்து, 'சி.டி.ஆர்.எல்' என்ற படத்தில் நடித்துள்ளார். சாப்ரான் மற்றும் அந்தோலன் பிலிம்ஸ் இணைந்து இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.

இந்த திரில்லர் படத்தில் அனன்யா பாண்டே கண்டன்ட் கிரியேட்டராக நடித்திருக்கிறார். இப்படம் நேற்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி.தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. பல்வேறு தரப்பினரும் அனன்யா பாண்டேவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தை பார்த்து இயக்குனர் அனுராக் காஷ்யப், அனன்யா பாண்டேவை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

'இந்த படத்தில் தனது சினிமா கெரியரில் சிறந்த நடிப்பை அனன்யா பாண்டே வெளிக்காட்டியுள்ளார். இது நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. நல்ல ஹெட்போன்களுடன் பாருங்கள். படக்குழுவுக்கு வாழ்த்துகள்' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்