< Back
சினிமா செய்திகள்
கோட் படத்தில் தனது டப்பிங் பணியை முடித்த சி.எஸ்.கே. முன்னாள் வீரர்
சினிமா செய்திகள்

'கோட்' படத்தில் தனது டப்பிங் பணியை முடித்த சி.எஸ்.கே. முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
3 Sept 2024 7:58 PM IST

'கோட்' படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது

சென்னை,

நடிகர் விஜய் நடிப்பில் வெளி வரவிருக்கும் -"தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்-" (GOAT) திரைப்படம், நாளை மறுநாள் (செப்டம்பர் 5ம் தேதி) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் கேரள மாநிலத்தில் உள்ள திரையரங்குகளில் நாளை மறுநாள் 5ம் தேதி அதிகாலை 4 மணிக்கு முதல் நாள் முதல் காட்சிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.'கோட் 'படத்தில் விஜயுடன் பிரசாந்த், அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, மோகன் மற்றும் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோட் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்த நிலையில் , கோட் படத்தில் தனது டப்பிங் பணியை சி.எஸ்.கே. முன்னாள் வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

கோட் படத்திற்காக என்னால் முடிந்த உதவியை செய்துள்ளேன். நான் முதல் முறையாக ஒரு திரைப்படத்தின் பகுதியாக இருக்கிறேன், மிகவும் உற்சாகமாக விமர்சனங்கள் மற்றும் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன். என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்