கவர்ச்சி உடையை விமர்சிப்பதா? ரசிகர்களை சாடிய நடிகை மீரா நந்தன்
|மீரா நந்தன் சமீப காலமாக அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்
தமிழில் வால்மீகி, அய்யனார், காதலுக்கு மரணமில்லை, சூர்ய நகரம், சண்ட மாருதம், நேர்முகம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீரா நந்தன். மலையாளத்தில் பிரபல நடிகையாக இருக்கிறார்.
மீரா நந்தன் சமீப காலமாக அரைகுறை ஆடையில் தன்னை விதம் விதமாக கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சிலர் மீரா நந்தனை கடுமையாக விமர்சித்தனர்.
உங்கள் புகைப்படங்களில் கவர்ச்சி அதிகமாக இருக்கிறது. பட வாய்ப்புகளை பிடிக்க இதுபோன்ற கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவது சரியல்ல. இது உங்கள் இமேஜை கெடுத்து விடும் என்று பதிவுகள் வெளியிட்டனர்.
இதற்கு மீரா நந்தன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறும்போது, "பட வாய்ப்புகளை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடவில்லை. நான் சில வருடங்களாகவே துபாயில் வசிக்கிறேன்.
அங்கு நான் அணியும் உடைகளை யாரும் கண்டு கொள்வது இல்லை. சமூக வலைத்தளங்களில் நான் வெளியிடும் புகைப்படங்களால் உங்களுக்கு என்ன பிரச்சினை. சினிமாவில் கதாபாத்திரமாக என்னை பாருங்கள். சினிமாவுக்கு வெளியே எனக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. உடைகளை பார்த்து யாரையும் மதிப்பிடாதீர்கள்'' என்றார்.