"கவர்ச்சியாக நடிப்பதாக என்னை விமர்சிப்பதா?" - நடிகை தமன்னா கோபம்
|'பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியாக நடிப்பதா..?' என்ற ரசிகர்களின் கேள்விக்கு நடிகை தமன்னா பதில் அளித்துள்ளார்.
சென்னை,
தமிழ், தெலுங்கு, திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த தமன்னாவுக்கு இப்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாகவும் இதனால் கவர்ச்சியில் எல்லை மீறி நடிப்பதாகவும் விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. ரஜினியின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடலில் அரைகுறை உடையில் நடனம் ஆடி இருந்தார். இந்த நிலையில் தமன்னாவிடம் சினிமாவுக்கு வந்த புதிதில் அடக்கமாகவும் கவர்ச்சியில் எல்லை மீறாமலும் இருந்த நீங்கள் இப்போது துணிச்சலாக நடிக்க ஆரம்பித்து இருக்கிறீர்களே. இது பட வாய்ப்புகளை பிடிக்கும் முயற்சியா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்து தமன்னா கூறும்போது, "எனக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது என்று யார் சொன்னது? ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் உழைக்கிறேன். இவ்வளவு பிஸியாக இதற்கு முன் எப்போதும் இருந்ததில்லை. என் எல்லை எது என்பது எனக்கு தெரியும். நான் அணியும் உடைகள் என்பது கதாபாத்திரத்தின் தேவையை பொறுத்து இருக்கும். கேரக்டர் பிடித்தால்தான் செய்வேன். ஒத்துக் கொண்ட பிறகு அதற்கு முழுமையாக நியாயம் செய்ய வேண்டியது எனது கடமை. இது போன்ற அரைகுறை அறிவோடு கேள்விகளை தயவு செய்து கேட்க வேண்டாம்'' என்று கோபமாக கூறினார். திருமணம் எப்போது? என்ற இன்னொரு கேள்விக்கு "எனக்கு எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தோன்றுகிறதோ அப்போது செய்து கொள்வேன்'' என்றார்.