பதான் பட பாடலுக்கு கிரிக்கெட் வீரர் இர்பான் பதானின் ஒரு வயது மகன் கியூட் நடனம்
|பதான் திரைப்பட பாடலுக்கு கிரிக்கெட் வீரர் இர்பான் பதானின் ஒரு வயது மகன் நடனம் ஆடியதற்கு நடிகர் ஷாருக் கான் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
புனே,
நடிகர் ஷாருக் கான் நடிப்பில் ஆக்சன், திரில்லர், நகைச்சுவை கலந்த அதிரடியான அம்சங்களுடன் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், யாஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் ரூ.250 கோடி பட்ஜெட்டில் படம் தயாரானது.
இந்த படத்தில் ஷாருக் கான், தீபிகா, ஜான் ஆபிரஹாம், சல்மான் கான் ஆகியோரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. படத்திற்கு விஷால்-சேகர் இசையமைத்து உள்ளனர். படம் வெளிவந்து 20-க்கும் மேற்பட்ட திரையுலக சாதனைகளை படைத்தது. ரூ.ஆயிரம் கோடிக்கும் கூடுதலான வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்நிலையில், பதான் திரைப்படத்தில் நடிகர் ஷாருக் கான் மற்றும் நடிகை தீபிகா படுகோனே நடித்த ஜூமே ஜோ பதான் என்ற பாடலுக்கு கிரிக்கெட் வீரர் இர்பான் பதானின் ஒரு வயது மகன் நடனம் ஆடிய காட்சிகளை இர்பான் பகிர்ந்து உள்ளார்.
அதன் தலைப்பில், கான்சாப் அவர்களே, தயவு செய்து உங்களது ரசிகர் பட்டியலில் மற்றொரு அழகான ரசிகரையும் சேர்த்து கொள்ளுங்கள் என இர்பான் பதான் பதிவிட்டு உள்ளார்.
இந்த வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்ததும் பலரும் இதய எமோஜிக்களை வெளியிட்டு தங்களது அன்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, இர்பான் பதானுக்கு நடிகர் ஷாருக் கான் தனக்கே உரிய பாணியில் பதில் அளித்து உள்ளார்.
அதில், உங்களை விட திறமைசாலியாக மாறி வருகிறான்... சோட்டா பதான், என ஷாருக் கான் தனது மகிழ்ச்சியை தெரிவித்து உள்ளார். அதற்கு இர்பான் பதான், இதனையே ஒவ்வொரு முறையும் நான் மீண்டும், மீண்டும் கேட்க விரும்புகிறேன் என இர்பான் பதான் பதிலளித்து உள்ளார்.