'சட்டம் என் கையில்' படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட்ட கிரிக்கெட் வீரர் அஸ்வின்
|இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சென்னை,
பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ். இவர் 'மெரினா, தமிழ் படம், எதிர்நீச்சல், கத்தி, மான்கராத்தே, ரெமோ, வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல், கலகலப்பு-2, சிக்ஸர்' போன்ற படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகர் சதீஷ் 'நாய் சேகர்' என்ற திரைப்படம் மூலம் கதையின் நாயகனாக களமிறங்கினார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இவர் அடுத்ததாக 'ஓ மை கோஸ்ட்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்தநிலையில் நடிகர் சதீஷ் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரும் படம் 'சட்டம் என் கையில்'. இந்த படத்தில் வித்யா பிரதீப் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சம்பதா, அஜய் ராஜ், பவல் நவகீதன், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி, கஜராஜ், பாவா செல்லதுரை, ஜீவா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'சிக்ஸர்' திரைப்படத்தை இயக்கிய சாச்சி இந்த படத்தை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியானது. காமெடியனாக தொடங்கிய சதீஷ், தற்போது க்ரைம் த்ரில்லர் படத்தை தேர்வு செய்து நடித்திருப்பதை டீசர் உணர்த்துகிறது. விறுவிறுப்பாக நகரும் டீசர் படம் கொலையையும், அதன் காரணங்களையும் மையமாக வைத்து உருவாகியிருப்பதை உணர்த்துகிறது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தநிலையில் தற்போது இந்த படத்தின் முதல் 6 நிமிட காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் 'சட்டம் என் கையில்' படக்குழுவை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.