க்ரூ திரைப்படம் - இரண்டு நாட்களில் இவ்வளவு கோடி வசூலா
|கரீனா கபூர், கிருத்தி சனோன், தபு ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் க்ரூ.
மும்பை,
கரீனா கபூர், கிருத்தி சனோன் தபு ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் க்ரூ. இந்தப் படத்தை ராஜேஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். ஏக்தா கபூர், ரேகா கபூர் இந்தப் படத்தினை தயாரித்துள்ளார்கள். முன்னதாக இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சுமார் 5 கோடி பார்வையாளர்களை பெற்றிருந்தது. பின்னர், ஹோலி பண்டிகையை முன்னிட்டு கடந்த 29-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்தின் வசூல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 8.75 கோடி வசூலித்துள்ளது. மேலும் இரண்டாம் நாளில் இப்படம் ரூ.10.50 கோடி வசூலித்துள்ளது. மொத்தமாக இப்படம் இரண்டு நாட்களில் ரூ.19.25 கோடி வசூலித்துள்ளது.
பெண்களை முதன்மைப்படுத்தி வெளியான இந்தி திரைப்படங்களில் முதல்நாளில் அதிகம் வசூலித்துள்ள திரைப்படம் இதுதான் என்று படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.