< Back
சினிமா செய்திகள்
Court allows release of Thangalaan movie
சினிமா செய்திகள்

'தங்கலான்' படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதி

தினத்தந்தி
|
14 Aug 2024 3:58 PM IST

‘தங்கலான்’ படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை,

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின், புரொமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தை, ஸ்டுடியோ கிரீன் தயாரித்திருக்கிறது.

சமீபத்தில், சுந்தர் தாஸ் என்பவருக்கு ஸ்டுடியோ கிரீன் ரூ.10.35 கோடி கடனை செலுத்தாத விவகாரத்தில், படம் வெளியாகும் முன் ரூ.1 கோடி பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், உத்தரவின்படி ரூ.1 கோடி பணத்தை சொத்தாட்சியர் கணக்கில் செலுத்தியதாக ஸ்டுடியோ கிரீன் தரப்பில் தெரிவித்ததையடுத்து, 'தங்கலான்' படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், வழக்கு விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதனையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


மேலும் செய்திகள்