< Back
சினிமா செய்திகள்
இதனால்தான் படம் இயக்குவதில்லை - சமுத்திரக்கனி
சினிமா செய்திகள்

இதனால்தான் படம் இயக்குவதில்லை - சமுத்திரக்கனி

தினத்தந்தி
|
15 March 2024 11:28 AM IST

படத்தை உருவாக்கும்போது உள்ள சந்தோஷம் அதை வெளியிடும்போது இல்லை என்று சமுத்திரக்கனி கூறினார் .

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சமுத்திரக்கனி. தற்போது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். அவர் இல்லாத பெரிய நடிகர்களின் படங்களே இல்லை எனும் அளவுக்கு எல்லா படங்களிலும் நடித்து கலக்கி வருகிறார்.

இந்நிலையில் சமுத்திரக்கனி, தற்போது படங்கள் இயக்காதது குறித்து பேட்டி ஒன்றில் கூறினார். அதில்,

அப்பா என்ற படத்தை எடுத்துவிட்டு, அதை ரிலீஸ் செய்ய நான் பட்டபாடு எனக்குத்தான் தெரியும். சிறு பட்ஜெட் படங்களை பார்க்க ரசிகர்கள் தயாராக இருக்கிறார்களோ இல்லையோ அதை ரிலீஸ் செய்ய இங்குள்ளவர்கள் தயாராக இல்லை. படத்தை உருவாக்கும்போது உள்ள சந்தோஷம் அதை வெளியிடும்போது இல்லை. மலையாள படமான மஞ்சுமெல் பாய்ஸ் இங்கு ஓடுகிறது. தமிழ் சினிமாவிலும் அது போன்ற படங்கள் உள்ளன.

இந்த படங்களை ரசிகர்கள் கொண்டாடினால் பல நல்ல கதைகள் தமிழ் சினிமாவிற்கு வரும். அதுமட்டுமில்லாமல் மோகன்லால் மகன் படம் அடுத்து வர இருக்கிறது. அந்தப் படத்தை தியேட்டர்கள் வாங்க தயாராக இருக்கின்றன. ஆனால், யாவரும் வல்லவரே படம் வியாபாரம் ஆகவில்லை. சிறு பட்ஜெட் படங்களை வெளியிட உதவுங்கள். இதனால் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு யார் நடிக்க அழைத்தாலும் சென்று நடிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்