கேலிக்கு உள்ளான விஜய் தேவரகொண்டாவின் ரூ.69,000 மதிப்புள்ள சட்டை
|விஜய் தேவரகொண்டா பட விழா நிகழ்ச்சியில் அணிந்திருந்த சட்டையின் விலையை அறிந்து அதிர்ச்சியான ரசிகர்கள் அவரை மீண்டும் விமர்சித்து வருகிறார்கள்
தமிழில் நோட்டா படத்தில் நடித்து பிரபலமான விஜய் தேவரகொண்டா தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். இவரது தெலுங்கு படங்களை தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் இந்தி நடிகர் அமீர்கான் நடிப்பில் திரைக்கு வந்த லால்சிங் சத்தா படத்தை புறக்கணிக்கும்படி வலைத்தளத்தில் பலர் வற்புறுத்திய நிலையில் அந்த படத்துக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டு விஜய் தேவரகொண்டா சர்ச்சையில் சிக்கினார்.
இதையடுத்து விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்தை புறக்கணிக்கும்படி வலைத்தளத்தில் ஹேஷ்டேக் டிரேண்ட் ஆனது. லைகர் படம் தோல்வியும் அடைந்தது. இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா பட விழா நிகழ்ச்சியில் அணிந்திருந்த சட்டையின் விலையை அறிந்து அதிர்ச்சியான ரசிகர்கள் அவரை மீண்டும் விமர்சித்து வருகிறார்கள். இரண்டு, மூன்று விதமான துணிகளை ஒன்றாக வைத்து தைத்ததுபோல் இருக்கும் அந்த வெளிநாட்டு நிறுவன சட்டையின் விலை இந்திய மதிப்பில் ரூ.69 ஆயிரமாம். இவ்வளவு விலை உயர்ந்த சட்டை தேவையா என்று கேள்வி எழுப்பி அவரை கேலி செய்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது வலைத்தளத்தில் பரபரப்பாகி உள்ளது.