< Back
சினிமா செய்திகள்
Coolie film team celebrated Onam by dancing to Manasilayo - video goes viral
சினிமா செய்திகள்

'மனசிலாயோ' பாடலுக்கு நடனமாடி ஓணம் கொண்டாடிய 'கூலி' படக்குழு - வீடியோ வைரல்

தினத்தந்தி
|
15 Sept 2024 5:18 PM IST

'கூலி' படக்குழு 'மனசிலாயோ' பாடலுக்கு நடனமாடி ஓணம் கொண்டாடி உள்ளனர்.

சென்னை,

நடிகர் ரஜினி தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 10-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'மனசிலாயோ' பாடல் வீடியோ வெளியாகி வைரலானது.

வேட்டையனைத்தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் தனது 171-வது படமாக 'கூலி' படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சுருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா ஆகியோர் நடிக்கின்றனர்.

ரஜினியுடன் சுமார் 38 ஆண்டுகளுக்கு பிறகு சத்யராஜ் இணைந்துள்ளார். இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. சமீபத்தில், இப்படத்தில் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியானது. இதில், மலையாள நடிகர் சவுபின் சாஹிர் தயாளாகவும், சுருதிஹாசன் பிரீத்தியாகவும், உபேந்திரா காளிஷாவாகவும், சத்யராஜ் ராஜசேகராகவும், நாகார்ஜுனா சைமனாகவும், ரஜினிகாந்த் தேவா கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

இந்நிலையில், 'கூலி' படக்குழு 'மனசிலாயோ' பாடலுக்கு நடனமாடி ஓணம் கொண்டாடி உள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்