< Back
சினிமா செய்திகள்
புதுமுக நடிகரின் புதிய படத்தில் அம்மு அபிராமி
சினிமா செய்திகள்

புதுமுக நடிகரின் புதிய படத்தில் அம்மு அபிராமி

தினத்தந்தி
|
24 Jun 2022 4:20 PM IST

பனியன் தொழிலின் பின்னணியில் உருவாகும் காமெடி படத்தில் அம்மு அபிராமி நாயகியாக நடிக்கிறார்.

பனியன் தயாரிப்பில் நடக்கும் சம்பவங்கள் 'குதூகலம்' என்ற பெயரில் படமாகிறது. இந்தப் படத்தின் டைரக்டர் உலகநாதன் சந்திரசேகரன் கூறியதாவது:-

திருப்பூர் பனியன் தயாரிப்பில் ஒரு குறிப்பிட்ட பிரிவில் நடக்கும் சம்பவங்கள் முதல் முறையாக தமிழில் படமாக்கப்படுகிறது. இந்தப் படத்தை சுகின்பாபு தயாரிக்கிறார்.

திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டராக நான் (உலகநாதன் சந்திரசேகரன்) அறிமுகம் ஆகிறேன். துரைசெந்தில்குமார் டைரக்‌ஷனில் சிவகார்த்திகேயன் நடித்த காக்கிச்சட்டை, எதிர்நீச்சல் ஆகிய படங்களில் துணை இயக்குனராக பணிபுரிந்துள்ளேன்.

ஒரு இளைஞன் தனது அப்பாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற எடுக்கும் முயற்சிகளுக்கு இடையூறாக சில தடைகள் வருகின்றன. அப்படி வரும் தடைகளை, அந்த இளைஞன் எப்படி முறியடித்தான் என்பதே இந்தப் படத்தின் கதை.

பனியன் தொழில் பின்னணியில் நடக்கும் சம்பவத்தை நகைச்சுவையுடன் உருவாக்கி இருக்கிறேன். கதாநாயகனாக பாலமுருகன் அறிமுகம் ஆகிறார். அவருக்கு ஜோடியாக, அசுரன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த அம்மு அபிராமி நடிக்கிறார். தயாரிப்பாளர் சுகின்பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு திருப்பூரில் நடைபெற இருக்கிறது."

மேலும் செய்திகள்