< Back
சினிமா செய்திகள்
இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது
சினிமா செய்திகள்

இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது

தினத்தந்தி
|
21 March 2023 1:14 PM IST

இந்துத்துவா பற்றி டுவிட்டரில் சர்ச்சை பதிவுகளை வெளியிட்ட கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது செய்யப்பட்டு உள்ளார்.



பெங்களூரு,


கன்னட திரையுலகை சேர்ந்த நடிகர் சேத்தன் குமார் அகிம்சா. இவர் தனது டுவிட்டரில் இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவுகளை வெளியிட்டு உள்ளார். அந்த பதிவில், இந்துத்துவா பொய்களால் கட்டி எழுப்பப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்த சிவகுமார் என்பவர் சேஷாத்ரிபுரம் காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்து உள்ளார். இந்நிலையில், கன்னட நடிகர் சேத்தன் குமாரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இந்துத்துவா பொய்களால் கட்டி எழுப்பப்பட்டு உள்ளது. ராவணனை வீழ்த்தி ராமன் அயோத்தியா திரும்பியதில் இருந்து இந்திய நாடு என்பது தொடங்குகிறது என்ற சாவர்க்கரின் கருத்து ஒரு பொய்.

1992: பாபர் மசூதியே ராமரின் பிறப்பிடம் என கூறியது ஒரு பொய்.

2023: உரிகவுடா மற்றும் நஞ்சே கவுடா ஆகியோரே திப்புவை கொன்றவர்கள் என்றதும் ஒரு பொய் என அவர் தெரிவித்து உள்ளார்.

அதில் கடைசியாக, இந்துத்துவாவை உண்மையால் வீழ்த்த முடியும். சமத்துவம் என்பதே உண்மை என அவர் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். இந்நிலையில், சர்ச்சையாக பதிவிட்டதற்கு எதிரான புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.



மேலும் செய்திகள்