< Back
சினிமா செய்திகள்
விஷம் கொடுத்து என்னை கொல்ல சதி - வில்லன் நடிகர் புகார்
சினிமா செய்திகள்

''விஷம் கொடுத்து என்னை கொல்ல சதி" - வில்லன் நடிகர் புகார்

தினத்தந்தி
|
21 Jun 2023 11:37 AM IST

பிரபல வில்லன் நடிகர் ஜே.டி.சக்கரவர்த்தி. இவர் தமிழில் கன்னத்தில் முத்தமிட்டால், 'கச்சேரி ஆரம்பம்', 'அரிமாநம்பி', 'காரி' உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

ஜே.டி.சக்கரவர்த்திக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்து விட்டார். இந்த நிலையில் தொலைக்காட்சியொன்றுக்கு ஜே.டி.சக்கரவர்த்தி அளித்த பேட்டியில் தன்னை விஷம் கொடுத்து கொல்ல சதி நடந்ததாக பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ''எனக்கு சில மாதங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எனக்கு மது, சிகரெட், போதைப்பொருள் கெட்ட பழக்கம் எதுவும் இல்லை. ஆனாலும் மூச்சுவிடவே சிரமப்பட்டேன். இந்தியா, இலங்கையில் நிறைய பேரிடம் சிகிச்சை எடுத்தும் என்ன வியாதி என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு கட்டத்தில் உடல்நிலை மோசமாகி விட்டது. இனி பிழைப்பது கஷ்டம் என்று டாக்டர்கள் கைவிட்டனர். அப்போது நாகார்ஜுனா என்ற டாக்டர் எனக்கு ஏன் மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்பதை கண்டுபிடித்தார். எனக்கு வேண்டிய ஒருவர் 8 மாதங்களாக எனக்கு ஒரு கசாயம் கொடுத்து வந்தார். அதில் விஷம் கலந்து கொடுத்து இருப்பதை அந்த டாக்டர் கண்டுபிடித்தார்'' என்றார். இது பரபரப்பாகி உள்ளது.

மேலும் செய்திகள்