< Back
சினிமா செய்திகள்
காஞ்ஜூரிங் கண்ணப்பன் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது - திருப்பூர் சுப்பிரமணியன் பேட்டி
சினிமா செய்திகள்

'காஞ்ஜூரிங் கண்ணப்பன் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது' - திருப்பூர் சுப்பிரமணியன் பேட்டி

தினத்தந்தி
|
4 Jan 2024 7:23 AM IST

இந்த படத்தின் 25வது நாள் வெற்றி விழா செய்தியாளர் சந்திப்பில் திருப்பூர் சுப்பிரமணியன் பங்கேற்றார்.

சென்னை,

அறிமுக டைரக்டர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம், 'கான்ஜுரிங் கண்ணப்பன்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில், சதீஷ், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், ரெஜினா கஸாண்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, எல்லி அவ்ரம், ஜேஸன் ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படத்துக்கு எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். காமெடி ஹாரர் பாணியில் உருவாகிய இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் இருந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் காஞ்ஜூரிங் கண்ணப்பன் படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த இந்த படத்தின் 25வது நாள் வெற்றி விழா செய்தியாளர் சந்திப்பில் அவர் கூரியதாவது: 'கடந்த 4 வாரங்களாக இந்த படம் தான் திரையரங்களை ஆக்கிரமித்தது.

இதுபோன்ற சின்ன படங்கள் வெற்றிபெரும் போதுதான் தயாரிப்பாளர்களுக்கு சிறிய படங்களை தயாரிக்க ஆர்வம் ஏற்படும். குறிப்பாக இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. நல்ல படத்தை கொடுத்த படக்குழுவினருக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று பேசினார்.

மேலும் செய்திகள்