ஏழு பாடல்களுக்கு தந்தையான டி.இமான் - இயக்குனர் பார்த்திபன் வாழ்த்து
|பார்த்திபன் இயக்கும் 'டீன்ஸ்' படத்துக்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.
சென்னை,
இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 'இரவின் நிழல்' திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் நான் லீனியர் (Non-Linear) திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.
இதைத் தொடர்ந்து பார்த்திபன் 'டீன்ஸ்' (Teenz) படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். பயஸ்கோப் யு.எஸ்.ஏ மற்றும் அகிரா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு காவெமிக்அரி ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.சுதர்சன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
இசையமைப்பாளர் டி. இமான் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைதள பக்கத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "பிறந்த ஏழு பாடல்களுக்கும் தந்தையான டி.இமான் அவர்களுக்கு நன்றி. பின்னணி இசையிலும் தூள் கிளப்ப வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.