சென்னை
கை நழுவிச்செல்லும் படங்களால் கலக்கம்
|ஐஸ்வர்யா ராஜேசுக்கு வந்த வாய்ப்புகள் அனைத்தும் பிரியா பவானி சங்கருக்கு போய் இருக்கிறது. இதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் கடும் கலக்கத்தில் இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவின் திறமையான நடிகை என்று பெயர் பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
திறமையால் கஷ்டப்பட்டு தனக்கென தனி இடத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்று இருக்கிறார். அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கியும் வருகிறார். ஆனால் தற்போது சம்பள விஷயத்தில் 'கறார்' காட்டுவது, படப்பிடிப்பு தளத்தில் கடுமையாக நடந்து கொள்வது என்று இவரது போக்கே மாறி இருக்கிறது.
இதனால் இவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தயங்குகிறார்கள். அதேவேளை சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்த நடிகை பிரியா பவானி சங்கர் மீது கவனம் திரும்பி இருக்கிறது. இதனால் படுபிசியாக அவர் தற்போது படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். சம்பள விஷயத்தில் முரண்டு பிடிக்காமலும், படப்பிடிப்பு தளத்தில் பந்தா காட்டாமல் இருப்பதாலும் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேசுக்கு வந்த வாய்ப்புகள் அனைத்தும் பிரியா பவானி சங்கருக்கு போய் இருக்கிறது. இதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் இடத்தை பிரியா பவானி சங்கர் பிடித்துவிட்டார் என்று திரை உலகினர் கிசுகிசுக்கிறார்கள். இதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் கடும் கலக்கத்தில் இருக்கிறாராம்.