< Back
சினிமா செய்திகள்
Confirmed: Nivetha Pethuraj’s heated argument with cops is a promotional stunt
சினிமா செய்திகள்

பரபரப்பாக பேசப்பட்ட நிவேதா பெத்துராஜ் வீடியோ - அத்தனையும் நடிப்பா?

தினத்தந்தி
|
2 Jun 2024 8:04 AM IST

போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிவேதா பெத்துராஜின் வீடியோ பற்றிய உண்மை வெளியாகி இருக்கிறது.

சென்னை,

'ஒருநாள் கூத்து' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நிவேதா பெத்துராஜ். 'டிக் டிக் டிக்', 'திமிரு பிடிச்சவன்', 'சங்கத்தமிழன்', 'பொன் மாணிக்கவேல்', 'பார்ட்டி' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பல தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பாகவும் பேசப்பட்டார்.

சமீபத்தில் நிவேதா பெத்துராஜ், போலீசாரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியானது. அதில், போலீசார் நிவேதா பெத்துராஜின் காரை சோதனையிட வேண்டும் என கேட்க, அதற்கு அவர் அனுமதி மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

நிவேதா பெத்துராஜ் போலீசாரிடம் மாட்டிக்கொண்டு விட்டாரா? காரை சோதனையிட ஏன் அனுமதிக்கவில்லை? காருக்குள் அப்படி என்ன வைத்திருக்கிறார்? என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்தநிலையில், அந்த வீடியோ பற்றிய உண்மை வெளியாகி இருக்கிறது. அது 'பருவு' என்ற வெப் தொடருக்காக எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரியவந்துள்ளது. இதனால் அத்தனையும் நடிப்பா? என ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்