நடிகை ஹன்சிகாவுக்கு திருமணம்; ஜெய்ப்பூர் அரண்மனையில் தடபுடல் ஏற்பாடு
|நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ் மற்றும் தெலுங்கில் தற்போது அதிக அளவில் நடித்து வருகிறார்.
மும்பை
நடிகை ஹன்சிகா மோத்வானி திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு டிசம்பரில் திருமணம் நடைபெறும் என்றும் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனை ஒன்றில் திருமணம் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் மணமகன் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது தொடர்பாக நடிகையிடமிருந்தோ அல்லது அவரது உறவினர்களிடமிருந்தோ உறுதியான தகவல்கள் எதுவும் வரவில்லை.
கடந்த ஜூலை மாதம் ஹன்சிகா தனது 50வது படமான 'மஹா' ரிலீஸ் குறித்து பகிர்ந்து கொண்ட பதிவு பெரும் கவனத்தைப் பெற்றது. தனது அன்பான ரசிகர்கள் இல்லாமல் தனது குடும்பம் முழுமையடையாது என்றும் படங்கள் தனக்கானவை அல்ல என்றும் ஹன்சிகா கூறியுள்ளார்.
ஒரு நடிகைக்கு 50 படங்களை முடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை. பார்வையாளர்கள் கொடுத்த அன்பு தான் இந்த மைல்கல்லை அடைய உதவியது என்றும் ஹன்சிகா கூறி இருந்தார்.
ஷாகா லகா பூம் பூம், கியுங்கி சாஸ் பி கபி பஹு தி மற்றும் சன் பாரி டிவி சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஹன்சிகா மோத்வானே தெலுங்கு படமான தேசமுதுரு மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதில் அல்லு அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
பின்னர் சில இந்தி படங்களிலும் நடித்தார். 2008ல் கன்னடத்திலும் கதாநாயகியாக நடித்தார். ஹன்சிகா தமிழ் மற்றும் தெலுங்கில் தற்போது அதிக அளவில் நடித்து வருகிறார். ஹிருத்திக் ரோஷனின் வெற்றிப் படமான கோயி மில் கயாவிலும் ஹன்சிகா நடித்துள்ளார். ஹன்சிகாவின் அடுத்த ரவுடி பேபி.
ஹன்சிகா மும்பையில் பிறந்தவர். தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி, துளு, தமிழ் ஆகிய மொழிகளை பேசக்கூடியவர் நடிகை ஹன்சிகா. தந்தை பிரதீப் மோத்வானி ஒரு தொழிலதிபர் மற்றும் தாய் மோனா மோத்வானி ஒரு தோல் சிகிச்சை நிபுண்ஆவார்.