< Back
சினிமா செய்திகள்
வீட்டுக்குள் அறையில் இருந்த நடிகையை படம் பிடித்ததை எதிர்த்து போலீசில் புகார்
சினிமா செய்திகள்

வீட்டுக்குள் அறையில் இருந்த நடிகையை படம் பிடித்ததை எதிர்த்து போலீசில் புகார்

தினத்தந்தி
|
12 March 2023 7:44 AM IST

நடிகர் நடிகைகள் ஓட்டல்களுக்கு செல்லும்போது ரகசியமாக படம் பிடித்து புகைப்படங்களை வலைதளத்தில் வெளியிடும் போக்கு அதிகரித்து வருகிறது.

தற்போது அதையும் மீறிய செயலாக பிரபல இந்தி நடிகை அலியா பட் வீட்டுக்குள் ஒரு அறையில் சாதாரண உடையில் இருந்தபோது எதிர்வீட்டு மாடியில் இருந்து சிலர் கேமரா மூலம் ரகசியமாக புகைப்படம் எடுத்து வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

இதனால் அதிர்ச்சியான அலியாபட் புகைப்படம் எடுத்தவர்களை கண்டித்து உள்ளார். அவருக்கு ஆதரவாக நடிகர்-நடிகைகள் பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் அலியா பட்டின் கணவரும் இந்தி நடிகருமான ரண்பீர் கபூரும் இதனை சாடி உள்ளார். அவர் கூறும்போது, "வீட்டுக்குள் இருந்த எனது மனைவியை அவருக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த செயல் கேவலமானது. இதை மன்னிக்க முடியாது. அலியா பட்டின் தனியுரிமை இதனால் பாதித்து உள்ளது. இது குறித்து போலீசில் புகார் அளிக்க இருக்கிறேன்'' என்றார்.

மேலும் செய்திகள்