< Back
சினிமா செய்திகள்
நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்ட பிரபல நடிகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீசில் புகார்
சினிமா செய்திகள்

நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்ட பிரபல நடிகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீசில் புகார்

தினத்தந்தி
|
25 July 2022 7:59 PM IST

சமீபத்தில், ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோனின் கணவர். ரன்வீர் சிங்கின் ஆடை ஸ்டைலும் தோற்றமும் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

சமீபத்தில், ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவர் பத்திரிக்கை ஒன்றுக்காக போட்டோ ஷூட்டுக்கு போஸ் கொடுத்தார். அதில் தனது உடம்பில் ஒட்டு துணியும் இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்து உள்ளார்.

அவர் தனது சமூகவலைதளத்தில் இதனை பதிவிட்டார். இதனால் ரன்வீர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார்.

இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்த ரன்வீர் சிங், எல்லோர் முன்னிலையிலும் நிர்வாணப் படங்களுக்கு போஸ் கொடுப்பது எனக்கு ஒன்றும் கடினம் அல்ல. இந்த புகைப்படங்களில் எனது ஆன்மாவை பார்க்க முடியும். ஆயிரக்கணக்கான மக்கள் கூட நிர்வாணமாக இருக்க முடியும். ஆனால், சங்கடப்பட்டால் எதுவும் செய்ய முடியாது என்றார்.

இந்த நிலையில், ரன்வீர் சிங் தனது நிர்வாண புகைப்படங்களை, இணையத்தில் சமூகவலைதளத்தில் பதிவிட்டதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை தொடர்ந்து, நடிகர் ரன்வீர் சிங் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.

மேலும் செய்திகள்