< Back
சினிமா செய்திகள்
சட்டவிரோதமாக சிறுமியை தத்தெடுத்ததாக புகார்- நடிகை கைது
சினிமா செய்திகள்

சட்டவிரோதமாக சிறுமியை தத்தெடுத்ததாக புகார்- நடிகை கைது

தினத்தந்தி
|
23 March 2024 7:42 AM IST

போலீசார் வழக்குப்பதிவு செய்து சோனு ஸ்ரீனிவாஸ் கவுடாவை கைது செய்தனர்.

பெங்களூரு,

கன்னட நடிகை சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா. பெங்களூருவை சேர்ந்த இவர் 'காட்பரி' என்ற கன்னட படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார்.

சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா சமூக வலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் வெளியிட்டு வந்தார். சமீபத்தில் ஒரு சிறுமியை அவர் தத்தெடுத்தார். அந்த சிறுமியை அவர் சட்டவிரோதமாக தத்தெடுத்ததாக சர்ச்சைகள் கிளம்பின.

இந்த நிலையில் தத்தெடுத்த சிறுமியோடு இணைந்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா பகிர்ந்து வந்தார். இந்நிலையில், சட்டவிரோதமாக குழந்தையை தத்தெடுத்ததாக அவர் மீது குழந்தைகள் நலத்துறை சார்பில் பெங்களூருவில் உள்ள படரஹள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது.

பின்னர், போலீசார் வழக்குப்பதிவு செய்து சோனு ஸ்ரீனிவாஸ் கவுடாவை கைது செய்தனர். இதுகுறித்து சோனு வெளியிட்டுள்ள வீடியோவில், 'ஏழை சிறுமியை வீட்டுக்கு அழைத்து வந்ததை பாராட்டுங்கள். இல்லையேல் அமைதியாக இருங்கள்' என்று பேசி உள்ளார்.

மேலும் செய்திகள்