< Back
சினிமா செய்திகள்
எதிர்பார்ப்புடன் திரைக்கு வரும்... பொன்னியின் செல்வன்-2 டிக்கெட் முன்பதிவு
சினிமா செய்திகள்

எதிர்பார்ப்புடன் திரைக்கு வரும்... பொன்னியின் செல்வன்-2 டிக்கெட் முன்பதிவு

தினத்தந்தி
|
25 April 2023 6:20 AM IST

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது. பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இரண்டாம் பாகத்தில் ஐஸ்வர்யா ராயின் வில்லத்தனங்கள், ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் கொலை செய்யப்படும் சம்பவம், போர்க்கள காட்சிகள் இடம்பெற இருப்பதால் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. கார்த்தி, ஜெயம்ரவி, திரிஷா, சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா லட்சுமி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் பாகம் கதாபாத்திரங்களின் அறிமுகமாகவே இருந்தது என்றும் இரண்டாம் பாகத்தில்தான் கதை இருக்கிறது என்றும் படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

கடந்த 10 நாட்களாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் தனி விமானத்தில் இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு சென்னை திரும்பி உள்ளனர். இரண்டாம் பாகத்தின் கதை சுருக்கத்தை கமல்ஹாசன் விளக்கி பேசும் அறிமுக வீடியோ வெளியாகி வைரலாகிறது. தற்போது தியேட்டர்களில் பொன்னியின் செல்வன் படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்