< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
கோபி, சுதாகர் நடிக்கும் காமெடி படம்
|3 Feb 2023 7:34 AM IST
புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், பரிதாபங்கள் கோபி, சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் புதிய படம் தயாராகிறது.
இதில் வி.டி.வி. கணேஷ், சுரேஷ் சக்கரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், வின்சு ரேச்சல் சாம், ரமேஷ் கண்ணா, ராமசாமி, முருகானந்தம், பிரசன்னா, கவுதம், ஹரிதா உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர்.
படம் குறித்து கோபி, சுதாகர் ஆகியோர் கூறும்போது, ''நாம் அனைவரும் வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்கள் படத்தில் இருக்கும். அதோடு பேண்டசி கலந்து நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் பொழுது போக்கு படமாக உருவாகிறது.
இரண்டு இளைஞர்களின் வாழ்வில் நீங்களும் சில நாட்கள் இணைந்து பயணிப்பது போல் இருக்கும். ஒரு புது மாதிரியான நல்ல பொழுதுபோக்கு அனுபவமாக இப்படம் இருக்கும்'' என்றனர். மக்களிடமிருந்து திரட்டப்பட்ட பொது நிதியிலிருந்து படம் உருவாக்கப்படுகிறது. ஒளிப்பதிவு: சக்திவேல், கே.பி.ஶ்ரீ கார்த்திக், இசை: ஜ.