தேவா இசையில் காமெடி படம்
|`வா வரலாம் வா' என்ற பெயரில் புதிய படம் தயராகிறது. இதில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் `கொன்றால் பாவம்', `இரும்பு மனிதன்', `கதை திரைக்கதை வசனம்', `பயமா இருக்கு', `நான் அவளை சந்தித்தபோது' உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். `வா வரலாம் வா' படத்தில் நாயகியாக பவ்யா நடிக்கிறார்.
நகைச்சுவை வேடத்தில் கிங்ஸ்லி, வில்லனாக மைம் கோபி மற்றும் சிங்கம் புலி, சரவணன் சுப்பையா, தீபா, வையாபுரி, பயில்வான் ரங்கநாதன், போண்டாமணி, பிரபாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை எ.ஜி.ரவிசந்தர், எஸ்.பி.ஆர் ஆகியோர் இணைந்து டைரக்டு செய்கிறார்கள்.
பணத்துக்காக ஆசைப்பட்டு பள்ளிக் குழந்தைகளை கடத்திய நாயகனும், அவனது நண்பனும் அதில் வெற்றி பெற்று பணக்காரர்கள் ஆனார்களா? என்பதை நகைச்சுவையாக படமாக்கி உள்ளனர். எஸ்.பி.ஆர். தயாரித்துள்ளார். சுமார் 400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள தேவா, இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவு: கார்த்திக் ராஜா.