< Back
சினிமா செய்திகள்
பிதாமகன் பட நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார்
சினிமா செய்திகள்

'பிதாமகன்' பட நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார்

தினத்தந்தி
|
2 April 2024 2:55 PM IST

நடிகர் விஸ்வேஷ்வர ராவ் உடல் சிறுசேரியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ், தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராகப் புகழ் பெற்றவர் நடிகர் விஸ்வேஷ்வர ராவ் (62). இன்று அதிகாலை இவர் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற இருக்கும் நிலையில், சிறுசேரியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட விஸ்வேஷ்வர ராவ், சினிமாவில் மட்டுமல்லாது சீரியல்களிலும் நடித்து வந்தார். ஆந்திராவை பூர்விகமாகக் கொண்ட இவர் தனது சினிமா வாழ்க்கையை எழுத்தாளர் மற்றும் இயக்குநராகத் தொடங்கினார். விக்ரம் - சூர்யா நடிப்பில் வெளியான 'பிதாமகன்' படத்தில் லைலாவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

விஸ்வேஸ்வர ராவ் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளார். விஸ்வேஸ்வர ராவ் தெலுங்கு திரைப்படங்களில் பல நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நகைச்சுவை நடிகர் சேஷூ, டேனியல் பாலாஜி, இப்போது விஸ்வேஷ்வர ராவ் என தொடர்ச்சியாக நடிகர்களின் இறப்பு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்