காமெடி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை
|காமெடி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவாவுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
புதுடெல்லி,
இந்தி திரையுலகில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் அறியப்படுபவர் ராஜூ ஸ்ரீவஸ்தவா (வயது 59). இவர் நேற்று காலை டெல்லியில் உள்ள ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்து உள்ளார்.
அப்போது, திடீர் என அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். நடிகர் ராஜூவின் சகோதரர் ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா கூறும்போது, அவருக்கு லேசான நெஞ்சுவலி தான் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் சுய நினைவுடன் உள்ளார் என்று கூறினார்.
இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என கூறப்படுகிறது. அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் அளிக்கப்பட்டு உள்ளது அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.