< Back
சினிமா செய்திகள்
வாரிசு, துணிவு சிறப்புக் காட்சிகளைத் திரையிட்ட 8 திரையரங்குகளுக்கு கோவை  கலெக்டர் நோட்டீஸ்
சினிமா செய்திகள்

வாரிசு, துணிவு சிறப்புக் காட்சிகளைத் திரையிட்ட 8 திரையரங்குகளுக்கு கோவை கலெக்டர் நோட்டீஸ்

தினத்தந்தி
|
22 Jan 2023 6:32 PM IST

ஒரே நாளில் 2 உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர்

கோவை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த 'துணிவு', நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய திரைப்படங்கள் வெளியானது.

ஒரே நாளில் 2 உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர். படம் வெளியான தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் கட்-அவுட், பேனர் வைத்தும், கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி வாரிசு, துணிவு பட சிறப்புக் காட்சிகளை வெளியிட்ட 8 திரையரங்குகளுக்கு கோவை கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்